Publish Date: Tue, 06 Jan 2009 (21:33 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
நடிகை சங்கீதா, பாடகர் க்ரிஷ் காதல் திருமணம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது.
உயிர், தனம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் சங்கீதா. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாடகர் க்ரிஷுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை சங்கீதா மறுத்தாலும் காதலிப்பது உண்மை என ஒத்துக்கொண்டார் க்ரிஷ். விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி சங்கீதா, க்ரிஷ் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருவண்ணாமலை கோயிலில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும். இதில் அனைத்து திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார், சங்கீதா.