Publish Date: Tue, 06 Jan 2009 (21:32 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
கைது, ஜாமீன் கெடுபிடிகளிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டார், இயக்குனர் அமீர். பருத்திவீரனை எப்படி கிராமத்து காவியமாக செதுக்கி செப்பனிட்டாரோ அதேபோல் தனது நடிப்பில் உருவாகும் யோகியை சேரியின் முகவரியாக கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளார்.
யோகி, அமீர் நடிக்கும் முதல்படம். ஆட்டம் பாட்டம் என தனது அறிமுகத்தை வழக்கமான பார்முலாவுக்குள் அடக்கிவிடாமல் வித்தியாசமான கதைக் களத்துடன் யோகியின் கதையை எழுதி, தயாரித்து, நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளிவர வேண்டிய படம் கைது நடவடிக்கையால் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுப்ரமணிய சிவா யோகியை இயக்குகிறார். சேரிவாசியாக வரும் அமீருக்கு ஜோடி மதுமிதா. விரைவில திருமணமாகி செட்டிலாக இருக்கும் மதுமிதா தனது பெயர் சொல்லும் படமாக யோகி இருக்கும் என தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் சினேகன் முதல்முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளது இன்னொரு சிறப்பம்சம்.
ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்னை வந்த அமீர், யோகியின் கடைசிகட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். விரைவில் யோகியின் பாடல்களை வெளியிடும் வேலைகள் நடந்து வருகிறது.