குறும் படம் மற்றும் ஆவணப் படங்களுக்கென்று தொடங்கப்பட்டுள்ள தமிழ் ஸ்டுடியோ டாட் காம் மாதம்தோறும் குறும்பட வட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறது. குறும் படங்கள் திரையிடுவது, குறும் படங்கள் மீதான விவாதம், குறும் படங்களை எப்படி லாபகரமான முறையில் எடுப்பது என்பது போன்ற பயனுள்ள வியங்கள் இதில் விவாதிக்கப்படும்.
டிச.20 ஆம் தேதி சென்னை எக்மோர் மியூசியத்திற்கு எதிரிலுள்ள ஜீவன் ஜோதி கட்டடத்தில் ஐசிஎஸ்ஏ ஹாலில் குறும்பட வட்டத்தின் 3வது கூட்டம் நடைபெறுகிறது.
ஆட்டோ சங்கர், சந்தனக்காடு தொடர்களை இயக்கிய வ. கெளதமனின் பூ, ஏரி ஆகிய குறும் படங்கள் இதில் திரையிடப்படுகிறது. பார்வையாளர்கள் இந்த குறும் படங்கள் மீதான தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். வ. கெளதமன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் அவரிடம் நேரடியாகவும் விளக்கம் பெறலாம்.
இலக்கியங்களை எப்படி திரைப்படமாக்குவது என்பது குறித்து பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் இந்த கூட்டத்தில் பேச உள்ளார்.
அனுமதி இலவசம் என்பதால் ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.