Publish Date: Tue, 06 Jan 2009 (21:27 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
விஜயகாந்தின் விருதகிரிக்கும் இந்த சிவகிரிக்கும் ஒற்றுமை இல்லையயன்றாலும் படத்தின் கதையை கேட்டால் விஜயகாந்த் நடிக்க வேண்டிய படமாச்சே என்றுதான் யாருக்கும் தோன்றும்.
கோவையை சேர்ந்த தொழிலதிபர் மாயா சிவகிரியை தயாரிக்கிறார். ஷிவாஜி படத்தின் இயக்குனர். பொதுவாக படத்தில் வரும் நாயகனின் கேரக்டர் பெயரைதான் படத்துக்கு வைப்பார்கள்.
சிவகிரியில் கொஞ்சம் வித்தியாசமாக படத்தின் நாயகனின் சொந்த பெயரையே தலைப்பாக்கியிருக்கிறார்கள். ஆமாம், படத்தின் நாயகனின் பெயர் சிவகிரி (தயாரிப்பாளரும் இவர்தானோ?).
இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து அழிப்பதுதான் படத்தில் கதாநாயகனின் வேலை. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகிறார்கள். சசியின் டிஷ்யூம் படத்துக்கு சண்டைக் காட்சிகள் அமைத்த டிஷ்யூம் சக்தி வர்மா சிவகிரிக்கு சண்டைக் காட்சிகள் அமைக்கிறார்.
தற்போது சிவகரியின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்து வருகிறது.