Publish Date: Tue, 06 Jan 2009 (21:24 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (15:39 IST)
நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் காதல் திருமணம் அடுத்த வருடம் பிப்ரவரியில் நடக்கிறது.
கிரிஷும், சங்கீதாவும் காதலிக்கும் செய்தி வெளியானதுமே, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பத் தொடங்கின. இதனை மறுத்த இருவரும் காதலிப்பதை மட்டும் மறுக்கவில்லை.
சங்கீதாவை காதலிப்பது உண்மை. இரு வீட்டார் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும் என அப்போது விளக்கமளித்தார், கிரிஷ்.
தற்போது கிரிஷ் மற்றும் சங்கீதா வீட்டினர் சம்மதம் தெரிவித்த நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இவர்கள் திருமணம் நடைபெறுகிறது. திருமண தேதியை இருவரும் விரைவில் அறிவிக்க உள்ளனர்.