Publish Date: Tue, 06 Jan 2009 (21:24 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (15:35 IST)
விஜயின் வில்லு பாடல்களை இன்று முதல் ரசிகர்கள் கேட்டு மகிழலாம். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் பாடல்களில் ஒன்று தெலுங்கு படத்தில் இடம்பெற்றது.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'ஜல்சா' அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
ஜல்சா-வில் இடம்பெற்ற பாடலொன்றை அவர் வில்லு படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். பாடல் ஆந்திராவில் கண்டபடி ஹிட்டானதுதான் இந்த ரிப்பீட்டுக்கு காரணம்.
தாணு தயாரிப்பில் விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் தேவி ஸ்ரீபிரசாத் இதே போன்று தெலுங்கு படத்திற்கு இசையமைத்த பாடலை பயன்படுத்தினார். அது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அந்த முன் அனுபவம் காரணமாக ஜல்சா பாடலுக்கு அதன் தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறார்.
சொந்த டியூனை பயன்படுத்துவதற்கே சினிமாவில் பயப்பட வேண்டியிருக்கிறது.