Publish Date: Tue, 06 Jan 2009 (21:23 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (15:33 IST)
19 ஆம் தேதி ராதாமோகனின் அபியும் நானும் ரிலீஸ். அழகிய தீயே-யில் தொடங்கிய இவரது பயணம், இந்தப் படத்துடன் இந்திக்கு ட்ராக் மாறுகிறது. ஆம், இந்திப் படம் இயக்குகிறார், ராதாமோகன்.
மொழி வெளியான போதே அதனை இந்தியல் ரீ-மேக் செய்ய பலரும் விரும்பினர். அபியும் நானும் படத்தை கமிட் செய்ததால் இந்தி ரீ-மேக்கை ஒத்திவைத்தார் ராதாமோகன்.
19-ம் தேதி அபியும் நானும் வெளியாவதால் உடனடியாக இந்திப்பட வேலைகளை தொடங்குகிறார். வரும் ஜனவரி முதல் மொழியின் இந்திப் பதிப்புக்கான வேலைகள் தொடங்குகின்றன.
மொழியில் ஜோதிகா நடித்த வேடத்தில் கரீனா கபூர் அனேகமாக நடிக்கலாம் என்கிறார்கள். நம்மூர் ஏ.ஆர். முருகதாஸின் இந்தி கஜினி இம்மாதம் 25ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.