Publish Date: Tue, 06 Jan 2009 (21:23 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (15:30 IST)
ஸ்ரேயாவின் ஹாலிவுட் கனவு கலைந்தது என்று சொல்லலாமா? நிலைமை ஏறக்குறைய அப்படிதான் இருக்கிறது.
அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் தி அதர் எண்ட் ஆஃப் தி லைன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார், ஸ்ரேயா. மும்பை கால் சென்டரில் பணிபுரியும் இளம் பெண்ணுக்கும், அமெரிக்காவில் வசிக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. James Dodson படத்தை இயக்கியிருந்தார்.
படம் தொடங்கப்பட்டபோது அதைப்பற்றி ஓயாது பேசிய பத்திரிக்கைகள், படம் வெளியான பிறகு கண்டுகொள்ளவில்லை. ஸ்ரேயாவின் இந்த ஹாலிவுட் படம் வட அமெரிக்காவில் ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. கலெக்சனும் படுமோசமாம்.
அடுத்த வருடம் தி அதர் என்ட் ஆஃப் தி லைன் இந்தியாவில் வெளியாகிறது. அப்போதாவது வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.