Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதம் வெளியிட்ட குளிர் 100 ஆடியோ

Advertiesment
கௌதம் வெளியிட்ட குளிர் 100 ஆடியோ
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:22 IST)
ஹாலிவுட்டின் ஷ்ரெக் உள்ளிட்ட பட‌ங்களில் பணிபு‌ரிந்திருக்கும் அனிதா இயக்கியிருக்கும் முதல் தமிழப் படம், குளிர் 100. இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் பிரபல இசையமைப்பாளருமான முரளியின் மகன் bobo shasi இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

குளிர் 100-ன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆடியோவை வெளியிட எடிட்டரும், இயக்குனருமான பி. லெனின் பெற்றுக் கொண்டார். எல்.கே. விஜய் குளிர் 100-க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழுக்கு முற்றிலும் புதியதாக இந்தப் படம் இருக்கும் என்று தெ‌ரிவித்தார் படத்தை இயக்கியிருக்கும் அனிதா. பாடல்களை கேட்கும்போது அவர் சொல்வது உண்மை என்றே எண்ணத் தோன்றியது.

Share this Story:

Follow Webdunia tamil