Publish Date: Tue, 06 Jan 2009 (21:21 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (13:40 IST)
திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகை ராதா தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது அக்கா அம்பிகா நடிக்க வந்ததைத் தொடர்ந்து ராதாவையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன.
இனி அரிதாரம் பூசுவதில்லை என்ற முடிவில், தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தவர் தனக்குப் பதிலாக தனது மகள் கார்த்திகாவை கலைத்துறையில் அறிமுகப்படுத்த உள்ளார்.
கார்த்திகாவை நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமுடன் திரையில் அறிமுகப்படுத்த பலர் முயன்றனர். ராதாவும், கார்த்திக்கும் அறிமுகமானது பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்பதால், அவர்களது வாரிசுகளையும் ஒரே படத்தில் அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டப்பட்டது. படிப்பு முடிந்த பின்பே தனது மகன் படங்களில் நடிப்பான் என கார்த்திக் கூறியதால், வாரிசுகள் இணைய வாய்ப்பில்லாமல் போனது.
இந்நிலையில் கார்த்திகாவுக்கு தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு வரவே, பச்சைக் கொடி காட்டினார் ராதா. விரைவில் இந்த ஜோடி திரையில் வலம்வர உள்ளது.