Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன் பிக்சர்ஸின் ஆரவாரம்

சன் பிக்சர்ஸின் ஆரவாரம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:20 IST)
பத்து தயா‌ரிப்பளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு படம் தயா‌ரிக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்தை பிரமிட் சாய்மீரா அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் சில காரணங்களால் இழுபறியில் உள்ளது.

இதே திட்டத்தை அறிவிக்காமலே செயல்படுத்தி வருகிறது, சன் பிக்சர்ஸ். படங்களின் ஒட்டுமொத்த விநியோக உ‌ரிமையை வாங்கி வந்த சன் பிக்சர்ஸ் தற்போது வேறு நிறுவனங்களின் உதவியுடன் படங்களை நேரடியாக தயா‌ரிக்க முடிவு செய்துள்ளது.

நரேன் நடிக்கும் பூக்கடை ரவி படத்தை ராடானுடன் தயா‌ரிக்கும் இந்நிறுவனம் அடுத்து காஜமைதீனின் ரோஜகம்பைன்ஸ் மூலம் தயா‌ரிக்கும் படம் ஆரவாரம்.

நேற்று நடந்த இப்படத்தின் பூஜையில் படத்தின் நாயகன் லாரன்ஸ், இயக்குனர் விஜயவாணன் மற்றும் தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், காஜமைதீன், அன்பாலயா பிரபாகரன், சிவசக்தி பாண்டியன், இப்ராஹிம் ராவுத்தர், சிவா, இயக்குனர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரவாரம் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. படத்துக்கு ஸ்ரீகாந்‌த் தேவா இசையமைக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil