Publish Date: Tue, 06 Jan 2009 (21:19 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (13:35 IST)
கள்வனின் காதலி, மச்சக்காரன் படங்களை இயக்கிய தமிழ்வாணன் அடுத்து குட் ஒன் பிலிம் பேக்டரிக்கு படம் இயக்குகிறார்.
தமிழ்வாணனின் முதல்படம் கள்வனின் காதலி, எஸ்.ஜே. சூர்யா மீதான ப்ளேபாய் இமேஜை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைத்ததை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. மச்சக்காரன் ஜீவனின் வெற்றிப் பாதையில் ஸ்பீடு ப்ரேக்கராக அமைந்ததை நாடறியும்.
இந்த இரு சுமார் படங்கள் தந்த படிப்பினையை மனதில் வைத்து முற்றிலும் புதிய பாணியில் தமிழ்வாணன் தனது மூன்றாவது படைப்பை உருவாக்குகிறார். கல்லூரி, வால்மீகி படங்களின் ஹீரோ அகில் இதில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை.
குட் ஒன் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆடுகளம் என பெயர் வைத்துள்ளார், தமிழ்வாணன்.