Publish Date: Tue, 06 Jan 2009 (21:18 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (13:33 IST)
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஆறு ஹீரோயின்கள் நடிக்கும் ராஜாதிராஜாவின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. லாரன்ஸுடன் கதாநாயகிகள் ஸ்னிக்தா, காம்னா ஜெத்மலானி, கிரண், மும்தாஜ் மற்றும் மீனாட்சி நடித்து வருகின்றனர்.
ஷக்தி சிதம்பரம் தனது சினிமா பாரடைஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கும் இந்தப் படத்தில் ஆறில் ஒருவராக நடிக்க சமிக்சா ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
தற்போது அவர் நடிக்கவில்லை என்கின்றன செய்திகள். சமிக்சாவின் போர்ஷன் குறைக்கப்பட்டதால் படத்திலிருந்து அவர் விலகியதாக கூறுகிறது, ராஜாதிராஜா யூனிட்.
கார்த்தீகை, பஞ்சாமிர்தம் படங்கள் வெளியானால் மீண்டும் பிஸியாவேன் என்று கூறினார் சமிக்சா. இந்த நம்பிக்கைதான் அவரை ராஜாதிராஜாவிலிருந்து விலக வைத்துள்ளது.