Publish Date: Tue, 06 Jan 2009 (21:13 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (14:51 IST)
வில்லங்கமான கதைகள் வேலு பிரபாகரனுக்கு வெல்லம் மாதிரி. காதல் அரங்கம் படத்தில் நாயகியை டாப்லெஸ்ஸாக நடிக்க வைத்ததை மறந்திருக்க முடியாது. சென்சார் கெடுபிடியால் ரசித்து எடுத்த காட்சிகளை எடிட் செய்து எறிந்தவர், அடுத்து முமைத்கான் நடிக்கும் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
ஒரு பாடலுக்கு ஆடும் முமைத்கான்தான் இந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாம். படத்தின் பெயர் மச்சக்கன்னி. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகும் மச்சக்கன்னிக்கு ஒளிப்பதிவும் வேலு பிரபாகரனே;. படத்தை சதீஷ் தயாரிக்கிறார்.
ஹாலிவுட் படத்தின் தழுவல் மச்சக்கன்னி என்பதை முதலிலேயே தெரிவித்துவிட்டார், படத்தை இயக்கும் ராஜவேலு. இந்த ஒன்றிற்காகவே ராஜவேலுக்கு கிரீடம் சூட்டலாம்.