Publish Date: Tue, 06 Jan 2009 (21:12 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (14:39 IST)
கலைஞர் டிவியின் தொகுப்பாளர் பிரஜனுக்கு பிரமோஷன். சின்னத்திரையிலிருந்து பெரியதிரைக்கு வருகிறார்.
காதலுக்கு இதுவரை பெற்றோரும், மற்றோரும்தான் வில்லனாக இருந்திருக்கிறார்கள். காதலுக்கு காதலர்களே வில்லனாக இருந்தால்... ? இயக்குனர் சுந்தர்பாரதி இப்படி மாற்றி யோசித்ததன் விளைவுதான் தலை எழுத்து என்ற பெயரில் படமாகிறது.
இந்தப் படத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவி சானலில் தொகுப்பாளராக இருக்கும் பிரஜன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பது, சித்திகா. இவருக்கும் சினிமா புதுசு. மாடலிங் துறையில் கேட் வாக் செய்கிறவராம்.
மெஹ்ரா மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.