Publish Date: Tue, 06 Jan 2009 (21:11 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (14:28 IST)
படிக்காதவன் முடிந்த நிலையில் மித்ரன் ஏ. ஜவஹர் இயக்கும் ரி மேக் படத்தில் நடித்து வருகிறார், தனுஷ்.
யாரடி நீ மோகினிக்குப் பிறகு ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது ரி மேக் படம் இது.
தெலுங்கில் வெற்றிபெற்ற ஆர்யா படத்தின் தழுவல் இந்தப் படம். தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் படத்தை தயாரிக்கிறது. விசாகப்பட்டணத்தில் தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படத்திற்கு கதிர் என பெயர் வைத்துள்ளனர். யாரடி நீ மோகினி போலவே இதுவும் வன்முறை தவிர்த்த குடும்பப் படமாம்.