கொஞ்சம் மிரட்டலாகதான் இருக்கிறது ஜாக்குவார் தங்கத்தின் சவாலை கேட்பதற்கு. இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கும் 650 வது படம் சூர்யா. இதற்கு ஒரு விசேஷம். படத்தை இயக்கியிருப்பதும் இவரே. நடித்திருப்பது ஜாக்குவாரின் மகன் விஜய சிரஞ்சீவி.
ஸ்டண்ட் மாஸ்டரின் மகனல்லவா.. உணவோடு, உடற்பயிற்சியும் ஊட்டி வளர்த்ததால் உலகின் அனைத்து தற்காப்பு கலையும் இவருக்கு அத்துபடி. இன்று வெளியாகியிருக்கும் சூர்யாவில் மொத்தம் பதினொரு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக இரண்டு பனை மரங்களுக்கு நடுவே காலை விரித்து அவர் நிற்கும் காட்சி பிரம்மிக்க வைக்குமாம்.
விஜய சிரஞ்சீவியின் இந்த வித்தையை யார் செய்தாலும் உடனடி பரிசு ஒரு லட்சம் என அறிவித்திருக்கிறார் ஜாக்குவார். முயன்று பார்க்கலாம் என்றால் முட்டி பெயர்ந்து விடுமோ என்று பயம்.
பயமில்லாத காளைகள் முயற்சி செய்யலாம்.