Publish Date: Tue, 06 Jan 2009 (21:07 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
அட, அவரா இவர்? சிந்தூரியின் போட்டோ பார்த்து புல்லரிக்கிறது கோடம்பாக்கம். எந்த சிந்தூரி என்று கேட்பவர்கள் ஷங்கரின் பாய்ஸ் படத்துக்கு ஞாபகத்தை ட்யூன் செய்யவும். ஜெனிலியாவுடன் நடித்த அதே சிந்தூரி.
தத்தி தாவுது மனசு படத்துக்குப் பிறகு செய்தியே இல்லாமல் தொலைந்து போனவர் திரும்பி வந்திருக்கிறார். எப்படி? தாராள மனசும், குறையாத இளமையுமாக.
“முன்பு மாதிரி நாயகியாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்க மாட்டேன். ஒத்தை பாடலோ, படம் முழுக்க வரும் கேரக்டரோ... எது கிடைத்தாலும் ஓகே” என தாரளமாக்கலை அமுல்படுத்தியிருக்கிறார்.
முதல்கட்டமாக தயாரிப்பாளர்களின் பிபியை எகிற வைக்கும் கிக் போட்டோசெஷன் ஒன்றை நடத்தி அந்த போட்டோவோடுதான் தனது குளோபலைசேஷன் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
சிந்தூரி புயலுக்கு ஆலமரங்கள் விழாவிட்டாலும் சில வாழை மரங்கலாவது சாயும்.