மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா...
காதல் ஒண்ணும் தப்புத்தண்டா இல்லப்பா - இதில்
கடவுளும் மனுசனும் ஒண்ணப்பா...
கானாவை கேட்பது சுகம். தேனிசை தென்றல் தேவாவின் இஞ்சி மொரப்பா குரலில் கேட்பதென்றால் அதன் சுகமே தனி. மேலே உள்ள கானா சரணின் முதல் படம் காதல் மன்னனில் தேவா பாடியது. இசை பரத்வாஜ்.
பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது மோதி விளையாடு படத்துக்காக தேவாவை கானா பாட வைத்திருக்கிறார் சரண். இந்தப் படத்துக்கு ஹரிஹரனும் அவரது நண்பர் லெஸ்லி லிவிஸும் இணைந்து இசையமைக்கின்றனர். இவர்கள் இசையில் அட்டகாசமான கானா பாடலொன்றை பாடியிருக்கிறார் தேவா.
சில நாட்கள் முன்பு இந்தப் பாடலின் ஒலிப்பதிவு நடந்தது.
கேட்டவரெல்லாம் பாடலாம் வகையை சேர்ந்ததாம் இந்தப் பாடல். ஒலிப்பதிவில் கேட்டவர்களின் கமெண்ட் இது.