விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆஃபிஸில் பிக் பாஸாக வீற்றிருக்கிறது, வாரணம் ஆயிரம். மூன்றே வாரங்கள்... 4.14 கோடி வசூல். சென்னையில் மட்டும் இந்த மகசூல்.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடம் செம்பியின் சாமிடாவுக்கு. மூன்று தினங்களில் இரண்டே கால் லட்சம் வசூலித்துள்ளது. சாமிடாவின் வெர்டிக்ட் பிலோ ஆவரேஜ். நான்காம் இடத்தில் மகேஷ் சரண்யா மற்றும் பலர். ஒரு வார வசூல் 13 லட்சங்கள்.
தெனாவட்டு 67 லட்சங்களுடன் இரண்டாவது இடத்திலும், 27 லட்சங்களுடன் பூ மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த வருடத்தில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக அறுவடை சூர்யா படத்துக்குதான் என்பது ஆச்சரியமான உண்மை.