வடிவேலு, விவேக், கருணாஸ் வரிசையில் காதல் சுகுமார். இவரும் இனி கதாநாயகன். சாமி புள்ள படம் இவரையும் நாயகனாக்கியிருக்கிறது.
ஆக்ரா, சொல்லி தெரிவதில்லை படங்களின் இயக்குனர் சித்திரை செல்வனிடம் உதவியாளராக இருந்தவர் ரங்கராஜன். காதல் சுகுமாரை கதாநாயகனாக்கும் பொறுப்பை இவர்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ரங்கராஜனின் கன்னி முயற்சியான சாமி புள்ள-யில் சுகுமார் ஹீரோ.
கதாநாயகிகள் இரண்டு பேர். சரண்யா மோகன், தூத்துக்குடி கார்த்திகா. கடல் நிறைய தண்ணீர் இருந்தாலும் காய்ச்சி குடிக்க முடியாத கதையாக இவர்கள் இருவரும் சுகுமாருக்கு ஜோடி கிடையாதாம். அட, இன்னும் வளர்ப்பானேன், ஜோடி இல்லாத ஹீரோவாம், சுகுமார்.
காமெடியனை கவுத்திட்டீங்களே.