Publish Date: Tue, 06 Jan 2009 (21:03 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
ஆறு வருடங்களாக சென்னையில் உலக திரைப்பட விழாவை நடத்தி வருகிறது, இந்தோ சினி அப்ரியேஷன் பவுண்டேஷன். தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவந்த இந்த திரைப்பட விழாவின் மீது தமிழக அரசின் கருணை பார்வை விழுந்திருக்கிறது.
வரும் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவுக்கு 25 லட்சம் ருபாய் வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அத்துடன் விழாவை தொடங்கி வைக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். 36 நாடுகளை சேர்ந்த 120 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும்.
இந்தோ சினி அப்ரியேஷனின் நிர்வாகிகள் தங்கராஜ், கண்ணன, எஸ்.வி. சேகர், ஆகியோர் முதல்வரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.