Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பையாவில் தமன்னா

Advertiesment
பையாவில் தமன்னா
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:03 IST)
நயன்தாரா லிங்குசாமியின் பையா படத்திலிருந்து விலகினாலும் விலகினார்... குறைந்த காற்றழுத்த மண்டலமாக ஒரே புயல் சின்னம். நயன்தாராவின் இடத்தை நிரப்பப் போவது யார்? த்‌ரிஷாவா? தமன்னாவா?

லிங்குசாமியின் முந்தைய படம் பீமாவில் த்‌ரிஷாதான் ஹீரோயின். படமும் ச‌ரியாகப் போகவில்லை. அதனால் லிங்குசாமியின் சாய்ஸ் தமன்னா என்கிறார்கள். அதேநேரம் அழைப்பு வந்தால் நடிக்க த்‌ரிஷா ரெடி. மர்மயோகிக்கு கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தியாக வேண்டுமே.

அயன், ஆனந்த தாண்டவம், படிக்காதவன் என தமன்னா நடித்து வரும் படங்கள் அனைத்தும் முடிவுறும் நிலையில் உள்ளது. கால்ஷீட் கேட்டால் உடனே கொடுக்க அவர் தயார். ஆக, தாயம் இப்போது லிங்குசாமி கையில், அதிர்ஷ்ட தேவதை தமன்னா பையில். இறுதி நிலவரம் இதுதான் என்கின்றன லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸிடமிருந்து வரும் தகவல்கள்.

Share this Story:

Follow Webdunia tamil