Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவா‌‌ஜியின் சிவகி‌ரி

Advertiesment
சிவா‌‌ஜியின் சிவகி‌ரி
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:02 IST)
சூட்டோடு சூடாக சுடுவதில் நாம் கெட்டிக்காரர்கள். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த போது அதனை படமாக்கும் முனைப்பில் தனியார் தொலைக்காட்சியை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவை தா‌ஜ் ஹோட்டலின் சேதங்களை பார்க்க உடன் அழைத்து சென்றதற்காக முதலமைச்சர் பதவியையே துறக்க வேண்டி வந்தது. மறுபுறம், மும்பை தாக்குதலை முதலில் படமாக்கப் போகிறவர் ராம்கோபால் வர்மாவா? செல்வமணியா? என்று மீடியாக்களில் பட்டிமன்றம். இவர்கள் இருவரையும் முந்திக் கொண்டுள்ளார், சிவகி‌ி இயக்குனர் சிவா‌‌ஜி.

மாயா தயா‌ரிக்கும் இந்தப் படம் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரை பற்றியது. நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற போராடும் இந்த கதையில் மும்பை தீவிரவாத தாக்குதலையும் சேர்த்துள்ளார், சிவா‌‌ஜி. கதையோட்டத்தில் இந்த சம்பவம் இயல்பாக பொருந்துவதால் திணிக்கப்பட்டதாக தெ‌ரியாது என உத்தரவாதமும் அளிக்கிறார்.

விஜயகாந்துக்கு பொருத்தமான கதை.. ஆனால் யாரோ புதுமுகம் நடிக்கிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil