ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரெட்டைச்சுழியின் படப்பிடிப்பு வரும் 15 ஆம் தேதி முதல் நெல்லையில் தொடங்குகிறது.
பாலசந்தரின் அசிஸ்டெண்ட் தாமிரா இயக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா, பாலசந்தர் இணைந்து நடிக்கின்றனர். பாலசந்தரின் உடல்நிலை சரியில்லாததால் அவர் நடிப்பது சந்தேகம் என்றொரு பேச்சும் நிலவுகிறது. கார்த்திக் ராஜா இசை. இரண்டு பாடல்களின் ஒலிப்பதிவு முடிந்துவிட்டது.
நெல்லையின் இலஞ்சி, மூலக்கரைபட்டி, சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் தாமிரா. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தைச் சேர்ந்தவர்களை படத்தில் நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம் இவரிடம்.
அசத்துங்க சார்.