ஜி. கிச்சா இயக்கியிருக்கும் தீ படம் பொங்கலுக்கு வெளியாகிறது. சுந்தர் சி. நடித்திருக்கும் இந்தப் படத்தில் நமிதா, ராகிணி என இரண்டு ஹீரோயின்கள்.
நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை. அரசியல்வாதிகளால் பந்தாடப்படுகிறவர் ஒருகட்டத்தில் கதர் அணிந்து, பந்தாடியவர்களை துண்டாடுகிறார். படத்தின் ஒரு காட்சியில் முக்கால் நிர்வாணமாக நடித்து கலவரப்படுத்தியிருக்கிறார், சுந்தர் சி.
இவரது மனைவியாக ராகிணி, நடிகையாக நமிதா. குத்துப் பாடல், வெளிநாட்டில் டூயட், சண்டை என அனைத்தும் உண்டு தீ-யில்.
கடைசியாக வெளியான படங்கள் சரியாகப் போகாத நிலையில் தீ-யை ரொம்பவே நம்பியிருக்கிறார், சுந்தர் சி.