Publish Date: Tue, 06 Jan 2009 (20:59 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:46 IST)
மர்மயோகி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தலைவன் இருக்கின்றான் படத்தை ஆரம்பிப்பதில் பிஸியாக இருக்கிறார் கமல். மர்மயோகியில் ஒப்பந்தமான த்ரிஷா, ஸ்ரேயா இருவரில் யார் தலைவன் இருக்கின்றானில் கமலின் ஜோடியாகப் போவது என்பது சஸ்பென்ஸ்.
கமல் இயக்கி நடிக்கும் இந்தப் படத்தில் அனேகமாக ஸ்ரேயா கமலுடன் ஜோடி சேரலாம் என கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து முறைப்படி அறிவிக்க உள்ளார், கமல்.