Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னடத்தில் சரண்யா மோகன்

Advertiesment
கன்னடத்தில் சரண்யா மோகன்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:57 IST)
குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று வட்டம் போடும் நடிகைகளை கட்டம் கட்டிதான் சினிமாவுக்கு பழக்கம். விதிவிலக்குகள் அத்தி பூப்பது போல. எப்போதாவது நடக்கும்.

யாரடி நீ மோகினியில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன், மேலே சொன்ன வட்டத்திற்குள் வெற்றிகரமாக வண்டி ஓட்டிக் கெண்டிருக்கிறார். இம்மாதம் இவர் நடித்த அஆஇஈ, பஞ்சாமிர்தம் படங்கள் வெளியாகின்றன. இதுதவிர அகராதி, வர்ணம், வெண்ணிலா கபடிக் குழு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் எந்தப் படத்திலும் இவர் கிளாமராக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணிலா கபடிக் குழுவில் நாயகி கபடி விளையாடும் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என பலர் கூறியும் இயக்குனர் அப்படியொரு காட்சிக்கு மறுத்திருக்கிறார். நாயகி சரண்யா மோகனின் குழுந்தைத்தனமான முகத்துக்கு கபடி காட்சி ச‌ரிவராது என தனது முடிவில் இறுதி வரை பிடிவாதமாக இருந்துள்ளார்.

ஹோம்லி வேடத்தில் கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கும் இவர், கன்னட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். கன்னடத்தில் தயாராகும் 'விவேகாலி இதிநீது' படத்தில் இவர்தான் நாயகி. கிளாமர் காட்டாத நாயகி.

Share this Story:

Follow Webdunia tamil