பூ-வில் நடித்த பார்வதிக்கு விருது கிடைக்குமா? கிடைக்காதா? பட்டிமன்றம் ஜோராக நடந்து வருகிறது. சொந்த குரலில் பார்வதி டப்பிங் பேசாததால்தான் இப்படி உருள்கிறது பார்வதியின் தலை.
இப்படியெல்லாம் பட்டிமன்றத்துக்கு இடம் தராமல் உஷாராக ஒரு நல்ல விஷயம் செய்திருக்கிறார், பூஜா. டப்பிங் தியேட்டர் வாசலையே இதுவரை மிதிக்காதவர் முதல்முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசினார். படம், நான் கடவுள்.
இந்தப் படத்தில் கண் தெரியாதவராக நடித்துள்ளார், பூஜா. ஏறக்குறைய பிதாமகன் சித்தன் அளவுக்கு கெத்தான வேடம். சொந்தக் குரலில் பேசாவிட்டால் விருது கிடைக்காது என்பதால் ஏவி.எம். டப்பிங் திரையரங்கில் கஷ்டப்பட்டு டப்பிங் பேசி வருகிறார்.
இஷ்டப்பட்டது கிடைக்க கஷ்டப்பட்டுதானே ஆகவேண்டும்.