கத்தாள கண்ணால் குத்த மடடுமல்ல குடையவே செய்கிறார் ஸ்னிக்தா. அஞ்சாதேயில் கத்தாள கண்ணாலே குத்துப் பாடலுக்கு ஆடிய இவரை தனது நந்தலாலாவில் நாயகியாக்கி அழகு பார்த்தார், மிஷ்கின். வரம் தந்தவர் தலையிலே கரம் வைத்த கதையாக படப்பிடிப்பில் ஏக குளறுபடி செய்கிறாராம் ஸ்னிக்தா.
ஷக்தி சிதம்பரம் இயக்கும் ராஜாதிராஜாவில் ஐந்து ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இரண்டு நாள் முன்பு படப்பிடிப்பு முடிந்து மும்பை கிளம்பியவருக்கு பிளைட்டில் பிஸினஸ் கிளாஸில் டிக்கெட் போடவில்லை என்பதற்காக ஊருக்கு கிளம்பாமல் தர்ணா செய்திருக்கிறார்.
ஒருமுறை அட்ஜெஸ்ட் செய்யுங்கள் என்று ஷக்தி சிதம்பரம் கேட்டும், கண்டு கொள்ளவில்லையாம் ஸ்னிக்தா. பிஸினஸ் கிளாஸில் டிக்கெட் போடவில்லையென்றால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன் என ஏறக்குறைய மிரட்டி காரியத்தை சாதித்த பின்பே ஊருக்கு கிளம்பியிருக்கிறார்.
ஒரு படம் உருப்படியாக நடிக்கும் முன் உலக ரவுசு காட்டும் இவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட உள்ளது. அப்படியே சிவப்பு அட்டை கொடுங்கள் என்று நஷ்டப்பட்டவர்கள் நறநறக்கிறார்கள்.