அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குகிறவர் சரண் என்பது முடிவாகிவிட்டது. படத்தின் பெயர், அசல். அதாவது ஒரிஜினல்.
நிஜமாகவே ஒரிஜினல்தான் என்கிறார்கள் யூனிட்டில். ஏன்?
அஜித் படத்தை கௌதம் இயக்குவதாகத்தான் இருந்தது. இசை ஹாரிஸ் ஜெயராஜ், ஹீரோயின் சமீரா ரெட்டி என்பது வரை முடிவானது. கௌதம் கடைசி வரை கதை சொல்லாததால் அவரை படத்திலிருந்து நீக்கினர்.
இயக்குனர் மாறினாலும் இசையமைப்பாளரும், நாயகியும் மாறவில்லை. அசலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நாயகி சமீரா ரெட்டி.
பில்லாவில் மிரள வைத்த நீரவ் ஷா கேமரா.
தல அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்டார்.