நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியராஜன் சைதாப்பேட்டை என்ற படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோ அவரது மகன், ப்ருத்வி.
கை வந்த கலையில் அறிமுகமான ப்ருத்விக்கு நடிப்பு கலை அத்தனை எளிதாக இல்லை. ஒரு மெகா இடைவெளிக்குப் பிறகு வைதேகி என்ற படத்தில் நடித்து வருகிறார். உடன் நடிப்பவர், தூத்துக்குடி கார்த்திகா.
இந்தப் படம் வெற்றி பெற்றால் மடடுமே ப்ருத்வியின் பெயர் கோடம்பாக்க ஏடுகளில் இடம்பெறும் என்ற நிலையில் மகனுக்காக தந்தையே நேரடியாக களம் இறங்குகிறார். இதற்காக சைதாப்பேட்டை என்ற ஸ்கிரிப்டை பக்காவாக தயார் செய்துள்ளார், பாண்டியராஜன்.
வைதேகி வெளிவந்த பிறகு சைதாப்பேட்டை ஆரம்பமாகும்.