பரிசோதனை முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த பார்த்திபன் மீண்டும் களத்தில் இறங்கும் படம், வித்தகன். இந்த டைட்டிலை விஜயகாந்தின் அரசாங்கம் படத்துக்கு கேட்டபோது தர மறுத்தார் பார்த்திபன். கதைக்கும் டைட்டிலுக்கும் அந்தளவு நெருக்கமாம்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவருக்கு கெஸ்ட் ரோலை விட கொஞ்சம் பெரிய ரோல். கேரக்டர் வித்தியாசமானது என்பதால் விரும்பி நடித்தார். தலைமுடியை கூட இந்தப் படத்துக்காக பாகவதர் அளவுக்கு வளர்த்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதில் அவருக்கு மன்னர் வேடம் என்கிறது ரகசிய தகவலொன்று.
ஆசையாக வளர்த்த முடியை வித்தகனுக்காக விட்டுக் கொடுக்கப் போகிறார் பார்த்தி. ஆம், இதில் மொட்டை தலையுடன் நடிக்கப் போகிறாராம்.
வித்தியாசமே உன் பெயர்தான் பார்த்திபனா?