Entertainment Film Featuresorarticles 0812 06 1081206062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.ஆர். ரஹ்மானின் இசை சாதனை

Advertiesment
ஏஆர் ரஹ்மான் எஸ்ஜே சூர்யா பவன் கல்யாண்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:52 IST)
தமிழ், இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

எஸ்.ஜே. சூர்யா பவன் கல்யாணை வைத்து இயக்கும் புலி படத்துக்கு இசையமைக்கிறார், ஏ.ஆர். ரஹ்மான். இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவர உள்ளது.

பாடல்களை வெளியிடும் உ‌ரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிவரும் சோனி எம்‌ஜிஎம் நிறுவனம் புலி படத்தின் ஆடியோ உ‌ரிமையை இரண்டரை கோடிக்கு வாங்கி உள்ளது.

தெலுங்கில் ஒரு படத்தின் ஆடியோ உ‌ரிமை இரண்டரை கோடிக்கு விலை போனது இதுவே முதல்முறை. எ.ஆர். ரஹ்மானின் இசை செய்த மாயம் இது.

சமீபமாக செல்போன் ‌ரிங்டோன் மூலம் ஆடியோ நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது. புலி-யின் பிரமாண்ட விற்பனைக்கு இதுவும் ஒரு காரணம்.

இதே படத்தை தமிழில் இயக்கி நடிக்க உள்ளார், எஸ்.ஜே. சூர்யா.

Share this Story:

Follow Webdunia tamil