Publish Date: Tue, 06 Jan 2009 (20:51 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (13:41 IST)
நேற்று தொடக்கவிழா நடந்தாலும் வரும் 8 ஆம் தேதி முதல்தான் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பத்து இயக்குனர்களை நடிக்க வைக்கிறார், இராசுமதுரவன்.
திமிரு, காளை படங்களை இயக்கிய தருண் கோபி மாயாண்டி குடும்பத்தாரின் நாயகன். இரண்டு நாயகிகள். கேரளா வரவான பூங்கோதை, இன்னொருவர் தமிழரசி.
தருண் கோபியுடன் மணிவண்ணன், ராஜ்கபூர், பொன்வண்ணன், சிங்கம்புலி, நந்தா பெரியசாமி, ரவி மரியா, ஜெகன்நாத், சீமான், ஜி.எம். குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
டிசம்பர் 8ஆம் தேதி முதல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு தொடங்குகிறது.