Publish Date: Tue, 06 Jan 2009 (20:50 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (13:28 IST)
மலையாள இயக்குனர்கள் தமிழுக்கு வருவது அதிகரித்து வருகிறது. கேரளாவில் மலையாளப் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்கள் வரவேற்பை பெறுவதும், இங்கு கிடைக்கும் பரவலான அங்கீகாரம், அதிக சம்பளம் இவையே மலையாள இயக்குனர்களை தூண்டில் போட்டு இழுக்கிறது.
மலையாளத்தில் நடிப்பு, தயாரிப்பு, எழுத்து என்றிருந்த எஸ். கிஷோர் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே. பெயருக்கு ஏற்ப பள்ளிப் பருவத்து காதலை சொல்லயிருக்கிறார் கிஷோர்.
இதில் காதலர்களாக சந்துருவும், சிப்பியும் நடிக்கின்றனர். சந்துரு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர். சிப்பி மலையாளத்தில் பிரபல மாடல். இவர்கள் இருவருக்கும் நடுவில் கரடியாக ஒரு போலீஸ் அதிகாரி வில்லன். அந்த வேடத்தில் கிஷோரே நடிக்கிறார்.
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே கிஷோர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது.