Publish Date: Tue, 06 Jan 2009 (20:49 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (13:26 IST)
பாட்டா அது? சரியான அதிர் வேட்டு. அப்படித்தான் சிலாகிக்கிறார்கள், அனுராதா ஸ்ரீராம் ஒரே மனசு படத்தில் பாடியிருக்கும் பாடலை கேட்டு.
குப்பை பொறுக்குகிறவர்களை மையமாக வைத்து விஷ்ணுஜி இயக்கிவரும் படம் ஒரே மனசு. படத்தின் கதையை கேட்டு ஆர்ட் ஃபிலிமோ என சந்தேகப்பட்டால் ஏமாந்தீர்கள். பக்கா கமர்ஷியல் படம் இது. சமீபத்தில் ஒலிப்பதிவான பாடலை கேட்டாலே உண்மை தெரிந்துவிடும்.
மார்கழிக்கு தோதான நாட்டுக்கட்டை நீ
எம்மனச சேலையாக்கி போர்த்திக்கிட்ட நீ
அடி.. வெளஞ்ச மாங்கனி உன்ன ருசிக்க போறேண்டி
நடுசாம வேதத்தை ஓதப் போறேண்டி..
இப்படி போகிறது அந்தப் பாடல். ஆர். சங்கர் இசையில் இந்த கவிச்சி.. ஸாரி, கவித்துவ வரிகளை எழுதியவர் ஆருர் தமிழ்நாடன். கிருஷ்ணராஜுடன் இணைந்து தனது கிக் குரலில் வெளுத்து கட்டியிருக்கிறார் அனுராதா ஸ்ரீராம்.
பாடலுக்கெல்லாம் சென்சார் கிடையாதா?