சில ஆண்டுகளுக்கு முன்னால் சந்தோஷ் சிவன் இயக்கிய அரவாணிகள் பற்றிய படமான 'நவரஸா' பல்வேறு விருதுகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது தங்கர்பச்சானின் உதவியாளர் சி.ஜே. முத்துக்குமார் என்பவர் மீண்டும் ஒரு அரவாணிகள் பற்றிய குறும்படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்ரீசெல்லியம்மன் கிரியேஷன்ஸ் சார்பில் தமிழ்செல்வி தயாரிப்பில் உருவான இப்படத்தின் பெயர் 'கோத்தி'. அரவாணிகள் மனக்குமுறலையும், வேதனையையும் அழகாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். இவர் ஏற்கனவே 'என்று மடியும்', 'எரிபொருள்' ஆகிய குறும்படங்களையும் இயக்கி பலரிடம் பாராட்டுப் பெற்றவராவார்.
மேலும், இந்த அரவாணிகள் கேட்பது சொர்க்கத்தையல்ல... நரகத்தையாவது இந்த சமூகம் எங்களுக்கு தராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
இது குறும்படத்தோடு நின்றுவிடாமல் பெரிய திரைப்படமாகவும் வெளியாகி அவர்கள் மீதுள்ள வெறுப்பை நீக்க வேண்டும். நல்ல விஷயங்கள் வெளியுலகத்திற்கு போய் சேராமல் இதன் வட்டம் சுருங்கிப் போவதுதான் வேதனை.