Publish Date: Tue, 06 Jan 2009 (20:48 IST)
Updated Date: Fri, 05 Dec 2008 (15:06 IST)
வெண்ணிலா கபடிக் குழுவைத் தொடர்ந்து கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படம், ராமன் நல்ல பிள்ளை. உபேந்திரா மூவிஸ் என்ற பட நிறுவனம் ராமன் நல்லபிள்ளையை தயாரிக்கிறது.
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியராஜன் என்ற மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களை இந்த காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றி ராமன் நல்ல பிள்ளையை எடுக்கிறார் அறிமுக இயக்குனர், பிரனீத்.
புதுமுகம் ரங்கபாபு ஹீரோ. படம் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. நாயகி ப்ரித்தி வர்மா.
தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தும், கஞ்சா கருப்பும் முதல் முறையாக இணைந்து காமெடி ஏரியாவை கலகலப்பாக்க உள்ளனர். ரஞ்சித் ரேன் இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ன. ரோஹித் கிருஷ்ணா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.