Publish Date: Tue, 06 Jan 2009 (20:46 IST)
Updated Date: Fri, 05 Dec 2008 (13:20 IST)
ஆக்சன் படங்கள் இயக்குவதில் தனி முத்திரை பதித்தவர், ரஞ்சித். இவரது இயக்கத்தில் மோகன்லால் நடித்த அனைத்துப் படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
மலையாளத்தில் மட்டுமே இதுவரை படம் இயக்கிக் கொண்டிருந்தவர் தமிழுக்கு வருகிறார். முதலில் இவரது இயக்கத்தில் நடிக்கயிருப்பவர், தனுஷ். தனுஷை சந்தித்து கதை கூறியிருக்கிறார், ரஞ்சித். கதை பிடித்துப் போகவே உடனே தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
இது மாலை நேரத்து மயக்கம், வெற்றிமாறன் இயக்கும் படம், மித்ரன் ஏ. ஜவஹர் இயக்கத்தில் தெலுங்கு ஆரியா படத்தின் ரீ-மேக் என கால்ஷீட்டை ஹவுஸ்ஃபுல்லாக வைத்திருக்கும் தனுஷ், இந்தப் படங்கள் முடிந்த பிறகு ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது நேரடி தமிழ்ப் படமாக இருக்கும்.