நயன்தாராவின் பில்லா பிகினியைப் பார்த்து பெரிய தயாரிப்பாளர்களே யோசிக்கும் பிரமாண்ட சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார் லிங்குசாமி. கார்த்தி நடிப்பில் இவர் இயக்கும் பையா படத்துக்குதான் இந்த பிரமாண்ட சம்பளம் பேசப்பட்டது. சம்பளம், ஒரு கோடியே பத்துலட்சம்.
ஏகன், சத்யம் படங்களின் பிளாப்பிற்குப் பிறகு நயன்தாராவுக்கு அவ்வளவு சம்பளம் தர வேண்டுமா என யோசிக்கிறார் லிங்குசாமி. நயன்தாராவுக்குப் பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்தால் நயன்தாராவுக்கு பேசிய சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கு லாபம்.
ஒப்பந்தம் போட்ட பிறகு ஆளை மாற்ற முடியாது. அதனால் நயன்தாராவே படத்திலிருந்து விலகினால் நல்லது என நினைக்கிறார், லிங்குசாமி.
பேசிய சம்பளத்தில் கணிசமான தொகையை குறைக்க நயன்தாராவின் மேனேஜர் வழியாக பேச்சு நடந்து வருகிறது. இந்த திடீர் மரியாதைக் குறைவால் கடுப்பில் இருக்கும் நயன்தாரா அவராகவே படத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளாராம்.
எப்படிப் பார்த்தாலும் லாபம் லிங்குசாமிக்குதான்.