Publish Date: Tue, 06 Jan 2009 (20:45 IST)
Updated Date: Fri, 05 Dec 2008 (13:03 IST)
இன்று இரு படங்களின் தொடக்க விழா நடைபெறுகிறது. பாண்டி படத்தை இயக்கிய இராசுமதுரவன் அடுத்து மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தை இயக்குகிறார். இதில் மொத்தம் பத்து இயக்குனர்கள் நடிக்கிறார்கள். ஒரே படத்தில் பத்து இயக்குனர்கள் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
பத்தில் ஒருவர் ஜாமீனில் வெளிவந்திருக்கும், சீமான். சபேஷ்-முரளி இசையில் பாடல் கம்போஸிங் தொடங்கிவிட்டது. தேவர் குடும்பத்தை பற்றிய கதையாம் மாயாண்டி குடும்பத்தார். முழுக்க கிராமத்திலேயே படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இன்னொரு படம் ஏ. வெங்கடேஷின் மலை மலை. அருண் விஜய் ஹீரோ. பிரகாஷ்ராஜ் வில்லன். இந்த இருவருக்குள்ளும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் படத்தின் கதை. மணிசர்மா இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதுகிறார்.
கனல் கண்ணன் படத்தின் ஆக்சன் பகுதிகளை கவனிக்கிறார். வெங்கடேஷின் ஆஸ்தான வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் படத்தின் வசனத்தை எழுதுகிறார்.
இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் இன்று தொடங்குகிறது.