Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோக்களின் மனைவிகள்

ஹீரோக்களின் மனைவிகள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:42 IST)
ஹீரோக்கள் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு படமில்லாத நிலைவரும் போது டக்கென்று மனைவி பெயரில் ஒரு சினிமா கம்பெனியை உருவாக்கி சொந்தப் படம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படித்தான் விஜயகாந்த் பட வாய்ப்புகள் குறைகிற நேரம் பார்த்து கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அதன்பின் சரத்குமார். சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் ஓடாததாலும், அடுத்தடுத்த படங்கள் இல்லாததாலும் ராடான் மூலம் சொந்தப் படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அதேபோல, குஷ்புவும் தன் கணவர் சுந்தர் சி-க்காக சொந்த படங்களைத் தயாரித்தார்.

அந்த பட்டியலில் தற்போது இறங்கியிருப்பவர் முன்னாள் கவர்ச்சி டிஸ்கோ சாந்தி. தனது கணவர் ஸ்ரீஹரியை வைத்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஒரு வயசுக்கு மேலே நடிக்க வாய்ப்பு வரவில்லை என்றால் சொந்தப் பணத்தை இப்படி இறக்கித்தானே ஆகவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil