Publish Date: Tue, 06 Jan 2009 (20:42 IST)
Updated Date: Thu, 04 Dec 2008 (16:03 IST)
பூ படத்தில் நாயகியாக நடித்து ஏகப்பட்ட பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருப்பவர் பார்வதி. கேரளா மாநிலத்தைச் நேர்ந்த இவர், அஞ்சல் வழி மூலம் ஆங்கிலத்தில் பி.ஏ. படித்து வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த 'மிலனா' என்ற படம் கர்நாடகத்தில் வெற்றிகரமாக ஓடியது.
அதன்பின் வெளியான பூ படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இருப்பினும் வேறு எந்தப் படங்களிலும் நடிக்க ஒப்புதல் கொடுக்கவில்லை. காரணம், கதை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் பார்வதி.
பூ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கிட்டத்தட்டட பன்னிரெண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்றபின்தான் அடுத்த படம் என்பதில் உறுதியாக இருந்தவர், தற்போது கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
வழக்கமான கதைகள் இல்லாமல் வித்தியாசமான கதையாக இருந்தால் பணம் கூட ரெண்டாம் பட்சம்தான் எனும் இவர், இன்றைய நடிகைகளில் வித்தியாசமானவர். அத்தோடு தமிழில் அறிமுகம் செய்த இயக்குனர் சசியை மனமார புகழ்வதோடு, மறக்க முடியாத இயக்குனர் என்கிறார்.