Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலக்கத்தில் ஹீரோக்கள்

Advertiesment
பெரிய ஹீரோக்கள் பட நிறுவனங்கள் பட்ஜெட் சம்பளம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:41 IST)
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ பல பெரிய பட நிறுவனங்களுக்கு தற்போது பொருந்துகிறது.

மிகப்பெரிய ஹீரோக்கள் எ‌ன்று கோடி கோடியாய் சம்பளம் கொடுத்து, பல கோடிகளை படப்பிடிபிற்காகவும், பாடல் காட்சிக்காகவும் கிரஃபிக்ஸ் வேலைகளுக்காகவும் கொட்டி படம் முடித்து ரிலீஸ் செய்தால்... பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் இல்லை.

இப்படி பெரிய நிறுவனங்கள் கூட இரண்டு படங்களிலேயே கம்பெனியை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நிலையில் இன்றும் பல கம்பெனிகள் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.

இதனால் பல முன்னணி நிறுவனங்கள் கூடி உட்கார்ந்து பேசி, இனிமேல் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே எடுப்பது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

இதை கேள்விப்பட்ட பல ஹீரோக்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என்று யோசித்து, சம்பளம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாமா... என ஆலோசித்து வருகிறார்கள்.

பின்னே, சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். இந்த முடிவை இப்போதாவது எடுத்தார்களே...

Share this Story:

Follow Webdunia tamil