Entertainment Film Featuresorarticles 0812 04 1081204050_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கதையும் பெயரும்

Advertiesment
மதுரை சம்பவம் சாமிடா நாஞ்சில் ஐந்தாம் திசை உண்மை சம்பவம்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:41 IST)
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரத்தில் முன்பெல்லாம் போட்டு வந்தார்கள். அது எந்த ஊரில், எந்த நாட்டில் என்றெல்லாம் தெரியாது. ஆனால், தற்போது உண்மை சம்பவம் நடந்த ஊரைப் பற்றி சொல்வதோடு, நடந்த சம்பவத்தையும் சொல்கிறார்கள்.

தூத்துக்குடி படத்தில் நடித்த ஹரிகுமார் 'மதுரை சம்பவம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடந்த ஒரு கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. அதேபோல் முழுக்க முழுக்க காசியில் நடக்கும் சம்பவத்தை சொல்லும் படமான 'சாமிடா' படத்தை இயக்கிய வடிவுடையான், அடுத்து ஸ்ரீகாந்தை வைத்து 'நாஞ்சில் ஐந்தாம் திசை' என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் மையக்கருத்தும் நாஞ்சில் நாட்டில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது. இப்படியே போனால்... 'சைதாப்பேட்டை மீன் மார்க்கெட்', உத்தப்புரம் ஜாதி‌க் கலவரம்', 'சட்டக் கல்லூரி மோதல்' என்றெல்லாம் பெயர் வைக்க ஆரம்பித்து விடப்போகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil