Publish Date: Tue, 06 Jan 2009 (20:39 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (15:07 IST)
சரண், சுசி. கணேசன் எல்லாம் பத்திரிகையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். இந்த வரிசையில் புதியவரவு, எம்.பி. உதயசூரியன்.
பத்திரிகையாளரான எம்.பி. உதயசூரியன் முதல் முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர், உப்பு மூட்டை. நட்புக்காக உயிரை கொடுக்கும் ஒருவனையும், அதே நட்புக்காக உயிரை எடுக்கும் ஒருவனையும் பற்றிய கதைதான் உப்பு மூட்டை.
புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை த்ரில் கலந்து விறுவிறுப்பாக எடுக்க இருப்பதாக தெரிவித்தார், உதயசூரியன்.
எப்படி எடுத்தாலும் பெயர் சொல்லும்படி எடுங்க.