Publish Date: Tue, 06 Jan 2009 (20:39 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (14:58 IST)
மம்முட்டி நடித்த மலையாளப் படம் மாணிக் பாட்ஷா என்ற பெயரில தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
மம்முட்டி, மனோஜ் கே. ஜெயன், பாலா நடித்த இந்தப் படம் வெளிநாட்டு சமூக சேவகியின் கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த சமூக சேவகியால் வளர்க்கப்பட்ட மம்முட்டியும் மற்றவர்களும் அந்த கொலைக்கு பழி வாங்குகிறார்கள்.
வழக்கமான மலையாளப் படங்களிலிருந்து மாறுபட்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை மாணிக் பாட்ஷா என்ற பெயரில் தமிழில் வெளியிட உள்ளனர். மம்முட்டியுடன் தமிழ்ப் படங்களில் நடித்துவரும் பாலாவும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தை தைரியமாக டப் செய்கிறார்கள்.