Publish Date: Tue, 06 Jan 2009 (20:38 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (14:55 IST)
நூறாவது நாள் படத்தில் மொட்டைத் தலையுடன் சத்யராஜ் மிரட்டியதைப் போல் படம் நெடுக க்ளீன் ஷேவ் தலையுடன் மிரட்ட வருகிறார், ஜெகத். உதிரம் படத்தின் நாயகன்.
ரொமான்டிக் த்ரில்லர் சிலந்தி எதிர்பார்த்ததைவிட நன்றாகப் போனதால் அதே ஸ்டைலில் தனது அடுத்தப் படமான உதிரத்தை தயாரித்து வருகிறார், ஜி கம்பெனி சங்கர். இந்தப் படத்தின் இயக்குனரும் அவரே.
பெண்களுக்கு எதிராக வன்செயல்கள் செய்யும் வில்லனை வீழ்த்தும் இளைஞனின் கதையே உதிரம். அந்த இளைஞனாக ஜெகத் நடிக்கிறார். மொட்டைத் தலையுடன் அவரே வில்லன் போல இருக்கிறார். அப்படியானால் வில்லன் எப்படி இருப்பார்? கற்பனையே த்ரில்லாக இருக்கிறது.
முழுக்க காடுகளில் படத்தை எடுத்திருக்கிறார், சங்கர். ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி. முன்னணி ஹீரோயின் கால்ஷீட் கிடைக்குமா என முயன்று வருகிறார்கள்.