Publish Date: Tue, 06 Jan 2009 (20:38 IST)
Updated Date: Wed, 03 Dec 2008 (14:54 IST)
வாடா படத்தை இயக்கிவரும் ஏ. வெங்கடேஷின் அடுத்தப் படம் மலை மலை. இந்தப் படத்தை வெங்கடேஷ் இயக்குவதாக முதலில் செய்தி வெளியான போது அதனை அவர் மறுத்தார்.
தனது அனுமதியில்லாமல் பெயரை மலை மலை யூனிட் பயன்படுத்துவதாகவும் வெங்கடேஷ் தரப்பில் புகார் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அருண் விஜயே படத்தை இயக்குவது என தீர்மானமானது.
இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார், வெங்கடேஷ். மலை மலை படத்தை இம்மாத இறுதியில் தொடங்குவதாக கூறியவர், படத்திற்கு லொகேஷன் பார்க்க மலேசியா சென்றுள்ளார். இதில் அருண் விஜய் ஜோடியாக வேதிகா நடிக்கிறார். வில்லனாக நடிப்பது பிரகாஷ்ராஜ்.
படத்தில் ஒரு மலை அருண் விஜய், இன்னொரு மலை பிரகாஷ்ராஜ். அதுதான் மலை மலை. ரெட்டை மலை என்றும் வைத்திருக்கலாம்.